قَالُوا۟ تَٱللَّهِ تَفْتَؤُا۟ تَذْكُرُ يُوسُفَ حَتَّىٰ تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ ٱلْهَٰلِكِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அல்லாஹ் மீது சத்தியமாக! நீர் அழிவை நெருங்கியவராக ஆகும் வரை அல்லது இறந்தவர்களில் ஆகும் வரை யூஸுஃபை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்” என்று (கடிந்து) கூறினர்.
Tamil Translation - Omar Sharif“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அழிவை நெருங்கியவராக நீர் ஆகும் வரை; அல்லது, இறந்தவர்களில் நீர் ஆகும் வரை யூஸுஃபை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர் (போலும்)” என்று அவர்கள் கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi85. (இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரை (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்'' என்று கடிந்து கூறினார்கள்.