caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 84

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:84

وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبْيَضَّتْ عَيْنَاهُ مِنَ ٱلْحُزْنِ فَهُوَ كَظِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களை விட்டு விலகி (திரும்பிச் சென்று), “யூஸுஃப் மீது என் துயரமே!” என்று கூறினார். அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்தன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர் அவர்களை விட்டு விலகிச் சென்று, “யூஸுஃபின் மீது எனக்குள்ள துயரமே!” என்று கூறினார். இன்னும், அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்து விட்டன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர்.
Tamil Translation - Abdulhamid Baqawi84. அவர்களை விட்டுவிலகிச் சென்று, ‘‘யூஸுஃபைப் பற்றி என் துக்கமே!'' என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70