فَلَمَّا ٱسْتَيْـَٔسُوا۟ مِنْهُ خَلَصُوا۟ نَجِيًّا قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوٓا۟ أَنَّ أَبَاكُمْ قَدْ أَخَذَ عَلَيْكُم مَّوْثِقًا مِّنَ ٱللَّهِ وَمِن قَبْلُ مَا فَرَّطتُمْ فِى يُوسُفَ فَلَنْ أَبْرَحَ ٱلْأَرْضَ حَتَّىٰ يَأْذَنَ لِىٓ أَبِىٓ أَوْ يَحْكُمَ ٱللَّهُ لِى وَهُوَ خَيْرُ ٱلْحَٰكِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்தபோது, அவர்கள் ஆலோசித்தவர்களாக விலகினர். அவர்களில் பெரியவர் “திட்டமாக உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் (பெயரால்) ஓர் உறுதிமானத்தை வாங்கியதையும், முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் தவறிழைத்ததையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கின்ற வரை அல்லது அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கின்ற வரை இந்த பூமியை விட்டு நான் நகர மாட்டேன்; அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, (தங்கள் கோரிக்கையை அவர் ஏற்கமாட்டார் என்று) அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்தபோது, அவர்கள் (தங்களுக்குள்) ஆலோசித்தவர்களாக (அவரை விட்டு) விலகி சென்றனர். அவர்களில் (வயதில்) பெரியவர் கூறினார்: “திட்டமாக உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் (பெயரால்) ஓர் உறுதிமொழியை வாங்கியதையும், இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் தவறிழைத்ததையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கின்ற வரை; அல்லது, அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கின்ற வரை இந்த பூமியை விட்டு நான் நகர மாட்டேன். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக மேலானவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi80. அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரை அல்லது அல்லாஹ் எனக்கு ஒரு தீர்ப்பளிக்கும் வரை இங்கிருந்து நான் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்'' என்று கூறினார்.