caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 81

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:81

ٱرْجِعُوٓا۟ إِلَىٰٓ أَبِيكُمْ فَقُولُوا۟ يَٰٓأَبَانَآ إِنَّ ٱبْنَكَ سَرَقَ وَمَا شَهِدْنَآ إِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حَٰفِظِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, எங்கள் தந்தையே! நிச்சயமாக உம் மகன் திருடினான். நாங்கள் அறிந்ததைக் கொண்டே தவிர நாங்கள் சாட்சி பகரவில்லை. மறைவானவற்றை பாதுகாப்பவர்களாக (அறிந்தவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுங்கள்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, (அவரிடம்) கூறுங்கள்: “எங்கள் தந்தையே! நிச்சயமாக உம் மகன் திருடிவிட்டார். இன்னும், நாங்கள் அறிந்தபடியே தவிர நாங்கள் (பொய்யாக) சாட்சி பகரவில்லை. மறைவானவற்றை அறிந்தவர்களாக நாங்கள் இருக்கவில்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi81. (மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே தவிர (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்;
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70