caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 77

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:77

قَالُوٓا۟ إِن يَسْرِقْ فَقَدْ سَرَقَ أَخٌ لَّهُۥ مِن قَبْلُ فَأَسَرَّهَا يُوسُفُ فِى نَفْسِهِۦ وَلَمْ يُبْدِهَا لَهُمْ قَالَ أَنتُمْ شَرٌّ مَّكَانًا وَٱللَّهُ أَعْلَمُ بِمَا تَصِفُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் (அதைத்) திருடினால் (யூஸுஃப் என்ற) அவருடைய ஒரு சகோதரன் முன்னர் (இப்படித்தான்) திருடிவிட்டான் என்று கூறினர். யூஸுஃப் அதை தன் உள்ளத்தில் மறைத்தார்; அதை அவர்களுக்கு வெளியாக்கவில்லை - “நீங்கள் மிகவும் தரம் கெட்டவர்கள். நீங்கள் வருணிப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்” - என்று (தன் மனதில்) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர் (அதைத்) திருடினால் (யூஸுஃப் என்ற) அவருடைய ஒரு சகோதரர் முன்னர் (இப்படித்தான்) திருடி இருக்கிறார் என்று அவர்கள் கூறினார்கள். யூஸுஃப், அதை தன் உள்ளத்தில் மறைத்து கொண்டார். அதை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் தரம் கெட்டவர்கள். நீங்கள் வருணிப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று (தன் மனதில்) கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi77. (புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக் கொண்டு ‘‘நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதை அல்லாஹ் நன்கறிவான்'' என்று கூறிவிட்டார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70