caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 78

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:78

قَالُوا۟ يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ إِنَّ لَهُۥٓ أَبًا شَيْخًا كَبِيرًا فَخُذْ أَحَدَنَا مَكَانَهُۥٓ إِنَّا نَرَىٰكَ مِنَ ٱلْمُحْسِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஓ அதிபரே! அவருக்கு “(வயதிலும் கண்ணியத்திலும்) பெரியவரான முதியவரான ஒரு தந்தை இருக்கிறார். ஆகவே, இவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை எடுப்பீராக. நிச்சயமாக நாம் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “அதிபரே! அவருக்கு “(கண்ணியத்தில்) பெரியவரான (வயதில்) முதியவரான ஒரு தந்தை இருக்கிறார். ஆகவே, இவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை பிடித்து வைப்பீராக. நிச்சயமாக நாம் உம்மை நற்குண சீலர்களில் காண்கிறோம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi78. அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) ‘‘அஜீஸே! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீர் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக்கொள்வீராக. நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70