فَبَدَأَ بِأَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَآءِ أَخِيهِ ثُمَّ ٱسْتَخْرَجَهَا مِن وِعَآءِ أَخِيهِ كَذَٰلِكَ كِدْنَا لِيُوسُفَ مَا كَانَ لِيَأْخُذَ أَخَاهُ فِى دِينِ ٱلْمَلِكِ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ نَرْفَعُ دَرَجَٰتٍ مَّن نَّشَآءُ وَفَوْقَ كُلِّ ذِى عِلْمٍ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதன் சகோதரனின் மூட்டைக்கு முன்பாக அவர்களின் மூட்டைகளில் (சோதனையை) ஆரம்பித்தார். பிறகு, தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். யூஸுஃபுக்கு இப்படித்தான் காரணம் செய்தோம். அல்லாஹ் நாடினால் தவிர (எகிப்து) அரசரின் சட்டப்படி அவர் தன் சகோதரனை எடுப்பவராக இல்லை. நாம் விரும்புகின்றவர்களை பதவிகளால் உயர்த்துகின்றோம். கல்வியுடைய ஒவ்வொருவருக்கும் மேல் ஒரு கல்விமான் இருக்கிறார்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர் தன் சகோதரனின் மூட்டைக்கு முன்பாக அவர்களின் (மற்ற சகோதரர்களின்) மூட்டைகளில் (சோதனையை) ஆரம்பித்தார். பிறகு, தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளியே எடுத்தார். யூஸுஃபுக்கு இப்படித்தான் நாம் காரணத்தை உருவாக்கினோம். அல்லாஹ் நாடினால் தவிர (எகிப்து) அரசரின் சட்டப்படி அவர் தன் சகோதரனை (தன்னுடன்) பிடித்து வைக்க முடிந்தவராக இல்லை. நாம் விரும்புகிறவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம். இன்னும், கல்வியுடைய ஒவ்வொருவருக்கும் மேல் நன்கறிந்த கல்வியாளர் ஒருவர் இருக்கிறார்.
Tamil Translation - Abdulhamid Baqawi76. பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலே தவிர அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும்விட மேலான கல்விமான்.)