caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 51

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:51

قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَٰوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفْسِهِۦ قُلْنَ حَٰشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِن سُوٓءٍ قَالَتِ ٱمْرَأَتُ ٱلْعَزِيزِ ٱلْـَٰٔنَ حَصْحَصَ ٱلْحَقُّ أَنَا۠ رَٰوَدتُّهُۥ عَن نَّفْسِهِۦ وَإِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அரசர் அப்பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு அழைத்த போது உங்கள் நிலை என்ன?” என்று கேட்டார். “அல்லாஹ் பாதுகாப்பானாக. நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை” என்று (அப்பெண்கள்) கூறினர். அதிபரின் மனைவியோ “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை (நிர்பந்தமாக) என் விருப்பத்திற்கு அழைத்தேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
Tamil Translation - Omar Sharif(அரசர், அப்பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு அழைத்த போது உங்கள் நிலை என்ன?” என்று கேட்டார். “அல்லாஹ் பாதுகாப்பானாக. நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை” என்று (அப்பெண்கள்) கூறினார்கள். அதிபரின் மனைவியோ “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை (நிர்ப்பந்தமாக) என் விருப்பத்திற்கு அழைத்தேன். இன்னும், நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் இருக்கிறார்.”
Tamil Translation - Abdulhamid Baqawi51. (இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) ‘‘நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?'' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் ‘‘அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை'' என்று கூறிவிட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்'' என்று கூறினாள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70