caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 50

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:50

وَقَالَ ٱلْمَلِكُ ٱئْتُونِى بِهِۦ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرْجِعْ إِلَىٰ رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ ٱلنِّسْوَةِ ٱلَّٰتِى قَطَّعْنَ أَيْدِيَهُنَّ إِنَّ رَبِّى بِكَيْدِهِنَّ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவ்விளக்கத்தை அரசரிடம் அறிவிக்கவே) அரசர் “(இதைக் கூறிய) அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார். (அழைத்துச் செல்ல) தூதர் அவரிடம் வந்தபோது அவர் (தூதருடன் செல்ல மறுத்து) “நீ உன் எஜமானனிடம் திரும்பிச் செல். தங்கள் கை(விரல்)களை வெட்டிய பெண்களின் (உண்மை) விஷயமென்ன? என்று அவரைக் கேள். நிச்சயமாக என் இறைவன் அவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்தவன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharif(இவ்விளக்கத்தை அரசரிடம் அறிவிக்கவே) அரசர் கூறினார்: “(எனது கனவுக்கு விளக்கமளித்த) அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்.” ஆக, (அழைத்துச் செல்ல) தூதர் அவரிடம் வந்தபோது, அவர் (தூதருடன் செல்ல மறுத்து) “நீ உன் எஜமானனிடம் திரும்பிச் செல். தங்கள் கை(விரல்)களை வெட்டிய பெண்களின் (உண்மை) விஷயமென்ன?” என்று அவரைக் கேள். நிச்சயமாக என் இறைவன் அவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்தவன்” என்று கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi50. (யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70