ذَٰلِكَ لِيَعْلَمَ أَنِّى لَمْ أَخُنْهُ بِٱلْغَيْبِ وَأَنَّ ٱللَّهَ لَا يَهْدِى كَيْدَ ٱلْخَآئِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அது, நிச்சயமாக நான் (என் எஜமானர்) மறைவில் (இருந்த போது) அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நல்வழி படுத்தமாட்டான் என்பதற்காகவும்தான் (இந்த விஷயங்களை விசாரிக்கும்படி கூறி தூதரை திருப்பி அனுப்பினேன் என்று யூஸுஃப் கூறினார்).”
Tamil Translation - Omar Sharif“அது, நிச்சயமாக நான் (என் எஜமானர்) மறைவில் (இருந்த போது) அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ் மோசடி செய்பவர்களின் சதி திட்டத்தை நல்வழி படுத்தமாட்டான் என்பதற்காகவும்தான் (அந்த பெண்களை விசாரிக்கும்படி நான் கூறினேன் என்று யூஸுஃப் விளக்கம் அளித்தார்).”
Tamil Translation - Abdulhamid Baqawi52. (இதைக் கேள்வியுற்ற யூஸுஃப் ‘‘முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணை செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என்(பதை அறிவிப்)பதற்காகவுமே'' (என்று கூறினார்).