فَٱسْتَجَابَ لَهُۥ رَبُّهُۥ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருடைய இறைவன் அவருக்கு பதிலளித்தான். ஆகவே, அவர்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பினான். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஆக, அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்த்னையை ஏற்றுக் கொண்டான். ஆகவே, அவர்களின் சதி திட்டத்தை அவரை விட்டும் திருப்பினான். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi34. (அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.