caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 25

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:25

وَٱسْتَبَقَا ٱلْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُۥ مِن دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَا ٱلْبَابِ قَالَتْ مَا جَزَآءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوٓءًا إِلَّآ أَن يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇருவரும், வாசலிற்கு முந்தினர். அவள் அவருடைய சட்டையை பின்புறத்தில் கிழித்தாள். வாசலில் அவளுடைய கணவரை இருவரும் பெற்றனர். “உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையிடப்படுவது அல்லது (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு வேதனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை” என்று கூறினாள்.
Tamil Translation - Omar Sharifஇருவரும், வாசலை நோக்கி ஓடினார்கள். அவளோ அவருடைய சட்டையை பின்புறத்திலிருந்து கிழித்தாள். இன்னும், வாசலில் அவளுடைய கணவரை அவர்கள் இருவரும் கண்டனர். (உடனே) அவள் கூறினாள்: “உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையில் அடைக்கப்படுவது; அல்லது, (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு தண்டனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi25. (யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறத்தை கிழித்துவிட்டாள். அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக் கொள்ளக் கருதி) அவரை நோக்கி ‘‘உமது மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்துகின்ற வேதனையைத் தருவதோ தவிர வேறு தண்டனை உண்டா?'' என்று கேட்டாள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70