caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:24

وَلَقَدْ هَمَّتْ بِهِۦ وَهَمَّ بِهَا لَوْلَآ أَن رَّءَا بُرْهَٰنَ رَبِّهِۦ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ ٱلسُّوٓءَ وَٱلْفَحْشَآءَ إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُخْلَصِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉறுதியாக, அவள் அவரை நாடி விட்டாள்; (இறுதியாக,) அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய ஆதாரத்தை அவர் பார்த்திருக்கவில்லையெனில்... (தவறு நடந்திருக்கும்). இவ்வாறுதான், கெட்டதையும் மானக்கேடானதையும் அவரை விட்டு நாம் திருப்புவதற்காக (நாம் ஆதாரத்தை காட்டுவோம்). நிச்சயமாக, அவர் தூய்மையாக்கப்பட்ட நம் அடியார்களில் இருக்கிறார்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக அவள் அவரை நாடினாள்; இன்னும், அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய ஆதாரத்தை அவர் பார்த்திருக்கவில்லையெனில் (அவர் தவறில் விழுந்திருப்பார்). இவ்வாறுதான், கெட்டதையும் மானக்கேடானதையும் அவரை விட்டு நாம் திருப்புவதற்காக (நாம் ஆதாரத்தை காட்டினோம்). நிச்சயமாக, அவர் (நபித்துவத்திற்காக) தூய்மையாக்கப்பட்ட (தேர்ந்தெடுக்கப்பட்ட) நம் அடியார்களில் இருக்கிறார்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70