caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 88

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:88

قَالَ يَٰقَوْمِ أَرَءَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَرَزَقَنِى مِنْهُ رِزْقًا حَسَنًا وَمَآ أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَآ أَنْهَىٰكُمْ عَنْهُ إِنْ أُرِيدُ إِلَّا ٱلْإِصْلَٰحَ مَا ٱسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِىٓ إِلَّا بِٱللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் மக்களே! அறிவியுங்கள்! என் இறைவனின் ஒரு தெளிவான அத்தாட்சியில் நான் இருப்பதால், அவன் தன்னிடமிருந்து எனக்கு நல்ல உணவை வழங்கி இருப்பதால் (நான் அவனுடைய தூது செய்தியில் மோசடி செய்வது தகுமா?)... நான் உங்களைத் தடுப்பதில் உங்களுக்கு முரண்படுவதற்கு நாடமாட்டேன். நான் இயன்றவரை சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நாடமாட்டேன். அல்லாஹ்வைக் கொண்டே தவிர என் நற்பாக்கியம் இல்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்தேன்; அவன் பக்கமே திரும்புகிறேன்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “என் மக்களே! என் இறைவனின் ஒரு தெளிவான அத்தாட்சியில் நான் இருந்தால், இன்னும், அவன் தன்னிடமிருந்து எனக்கு நல்ல (விசாலமான) வாழ்வாதாரத்தை வழங்கி இருந்தால் (நான் அவனுடைய தூது செய்தியிலும் எனது வர்த்தகத்திலும் மோசடி செய்து) அவனுக்கு நன்றி கெட்டத்தனமாக நடப்பது எனக்கு தகுமா? என்று அறிவியுங்கள்! இன்னும், நான் உங்களைத் தடுப்பதில் உங்களுக்கு முரண்பட்டு நடப்பதை நாடவில்லை. (நான் உங்களுக்கு எதை உபதேசிக்கிறேனோ அதன் படி நானும் நடப்பேன்.) நான், என்னால் இயன்ற வரை (உங்களை) சீர்திருத்தம் செய்வதைத் தவிர (எதையும்) நாடமாட்டேன். இன்னும், அல்லாஹ்வைக் கொண்டே தவிர நான் நன்மை செய்வதற்குரிய வாய்ப்பு (எனக்கு) இல்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) விட்டேன்; இன்னும், அவன் பக்கமே திரும்புகிறேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi88. அதற்கவர் ‘‘என் மக்களே! என் இறைவன் தெளிவான அத்தாட்சிகளை எனக்களித்திருப்பதையும், அவன் எனக்கு வேண்டிய உணவை நல்லவிதமாக அளித்து வருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலைமையில் மக்களை நான் மோசம் செய்யவேண்டிய அவசியமில்லை; ஆகவே,) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70