وَيَٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىٓ أَن يُصِيبَكُم مِّثْلُ مَآ أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَٰلِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎன் மக்களே! (உங்களுக்கு) என் மீதுள்ள விரோதம் ‘நூஹ்’வுடைய மக்களை அல்லது ஹூதுடைய மக்களை, அல்லது ஸாலிஹ் உடைய மக்களை அடைந்தது போன்று (ஒரு வேதனை) உங்களையும் அடைய நிச்சயம் தூண்ட வேண்டாம். லூத்துடைய (அழிக்கப்பட்ட) மக்களும் உங்களுக்குத் தூரமாக இல்லை.
Tamil Translation - Omar Sharif“என் மக்களே! (உங்களுக்கு) என் மீதுள்ள பகைமை நூஹ் உடைய மக்களை; அல்லது, ஹூத் உடைய மக்களை; அல்லது, ஸாலிஹ் உடைய மக்களை அடைந்தது போன்று (ஒரு தண்டனை) உங்களையும் வந்தடைவதற்கு உங்களை நிச்சயம் தூண்ட வேண்டாம். இன்னும், (தலைக்கீழாக புரட்டப்பட்ட) லூத்துடைய மக்களும் உங்களுக்குத் தூரமாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi89. ‘‘என் மக்களே! உங்களுக்கு என் மீதுள்ள விரோதம் ‘நூஹ்'வுடைய மக்களையும் ‘ஹூத்' உடைய மக்களையும், ‘ஸாலிஹ்' உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம். ‘லூத்து'டைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமாக இல்லை.