قَالُوا۟ يَٰشُعَيْبُ أَصَلَوٰتُكَ تَأْمُرُكَ أَن نَّتْرُكَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَآ أَوْ أَن نَّفْعَلَ فِىٓ أَمْوَٰلِنَا مَا نَشَٰٓؤُا۟ إِنَّكَ لَأَنتَ ٱلْحَلِيمُ ٱلرَّشِيدُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஷுஐபே! எங்கள் மூதாதைகள் வணங்கியவற்றை நாங்கள் விடுவதற்கும், அல்லது எங்கள் செல்வங்களில் நாங்கள் நாடுகின்றபடி நாங்கள் (செலவு) செய்வதை நாங்கள் விடுவதற்கும் உம் தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மகா சகிப்பாளர், நல்லறிவாளர்” என்று (கேலியாகக்) கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! எங்கள் மூதாதைகள் வணங்கியவற்றை நாங்கள் விடுவதற்கும்; அல்லது, எங்கள் செல்வங்களில் நாங்கள் நாடுகின்றபடி நாங்கள் (செலவு) செய்வதை நாங்கள் விடுவதற்கும் (பிறகு, நீ கூறுகின்ற மார்க்கத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்றும்) உம் தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மகா சகிப்பாளரோ, நல்லறிவாளரோ” (அப்படி எண்ணுகிறீரோ) என்று கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi87. அதற்கவர்கள் ‘‘ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீர் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உமது தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்'' என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.