وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَٰلِحًا قَالَ يَٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُۥ هُوَ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَٱسْتَعْمَرَكُمْ فِيهَا فَٱسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوٓا۟ إِلَيْهِ إِنَّ رَبِّى قَرِيبٌ مُّجِيبٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version‘ஸமூது’ (மக்கள்) இடம் அவர்களுடைய சகோதரர் -ஸாலிஹை-(தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; உங்களுக்கு அவனை அன்றி வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவனே உங்களை பூமியிலிருந்து உருவாக்கினான். அதில் அவன் உங்களை வசிக்க வைத்தான். ஆகவே, நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பிறகு, (பாவத் திலிருந்து) திருந்தி (நன்மை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிகச் சமீபமானவன், பதிலளிப்பவன்.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், ‘ஸமூது’ (மக்கள்) இடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. அவன்தான் உங்களை பூமியிலிருந்து உருவாக்கினான். இன்னும், அதில் அவன் உங்களை வசிக்க வைத்தான். ஆகவே, நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பிறகு, (பாவத்திலிருந்து) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிகச் சமீபமானவன், பதிலளிப்பவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi61. ‘ஸமூது' (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர, வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி பிறகு, அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவன், (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவன் என்று கூறினார்.