قَالُوا۟ يَٰصَٰلِحُ قَدْ كُنتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَٰذَآ أَتَنْهَىٰنَآ أَن نَّعْبُدَ مَا يَعْبُدُ ءَابَآؤُنَا وَإِنَّنَا لَفِى شَكٍّ مِّمَّا تَدْعُونَآ إِلَيْهِ مُرِيبٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸாலிஹே! நீர் இதற்கு முன்பு எங்களில் ஆதரவுக்குரிய (தலை)வராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டு நீர் எங்களைத் தடுக்கிறீரா? நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அது பற்றி நிச்சயமாக நாங்கள் மிக ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம் என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! நீர் எங்களில் உயர்ந்த தலைவராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுக்கிறீரா? இன்னும், நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அது பற்றி நிச்சயமாக நாங்கள் மிக ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi62. அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) ‘‘ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீர் எங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக் கூடாதென்று நீர் எங்களைத் தடை செய்கிறீரா? நீர் எங்களை எதனளவில் அழைக்கிறீரோ அதைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினர்.