فَإِن تَوَلَّوْا۟ فَقَدْ أَبْلَغْتُكُم مَّآ أُرْسِلْتُ بِهِۦٓ إِلَيْكُمْ وَيَسْتَخْلِفُ رَبِّى قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُۥ شَيْـًٔا إِنَّ رَبِّى عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் விலகினால் (எனக்கொன்றுமில்லை.) நான் உங்களிடம் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு திட்டமாக எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் தோன்றச் செய்வான்; நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. நிச்சயமாக என் இறைவன் எல்லாவற்றின் மீதும் (கண்காணிப்பவன் இன்னும்) பாதுகாவலன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஆக, நீங்கள் விலகினால் (எனக்கொன்றும் நஷ்டமில்லை.) நான் உங்களிடம் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு திட்டமாக எடுத்துரைத்து விட்டேன். இன்னும், (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் தோன்றச் செய்வான்; நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. நிச்சயமாக என் இறைவன் எல்லாவற்றையும் கண்கானிப்பவன் ஆவான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi57. நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவன். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்'' என்றும் கூறினார்.)