caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 56

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:56

إِنِّى تَوَكَّلْتُ عَلَى ٱللَّهِ رَبِّى وَرَبِّكُم مَّا مِن دَآبَّةٍ إِلَّا هُوَ ءَاخِذٌۢ بِنَاصِيَتِهَآ إِنَّ رَبِّى عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக நான் என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். உயிரினம் எதுவும் இல்லை அவன் அதன் உச்சி முடியை பிடித்தே தவிர. நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான்.”
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக, நான் என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து (அவனை சார்ந்து) விட்டேன். உயிரினம் எதுவும் இல்லை, அவன் அதன் நெற்றி முடியை பிடித்தே தவிர. நிச்சயமாக என் இறைவன் (நீதியும் நேர்மையும் மிக்க) நேரான வழியில் இருக்கிறான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi56. “நிச்சயமாக நான் என் காரியங்கள் அனைத்தையும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன். ஒவ்வொரு உயிருள்ளவற்றின் உச்சிக் குடுமியையும் அவனே பிடித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான் (என்றும்,)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70