وَلَمَّا جَآءَ أَمْرُنَا نَجَّيْنَا هُودًا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ بِرَحْمَةٍ مِّنَّا وَنَجَّيْنَٰهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்களை தண்டிப்பதற்கான) நம் உத்தரவு வந்தபோது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் பாதுகாத்தோம். கடுமையான வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம்.
Tamil Translation - Omar Sharif(அவர்களை தண்டிப்பதற்கான) நம் உத்தரவு வந்தபோது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் புறத்திலிருந்து (அவர்களை அடைந்த) அருளினால் பாதுகாத்தோம். இன்னும், கடுமையான தண்டனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. (இதன் பின்னும் அவர்கள் அவரை நிராகரித்து விட்டனர். ஆகவே,) நம் (வேதனையின்) உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால்பாதுகாத்துக் கொண்டு, கடுமையான வேதனையில் இருந்து நாம் அவர்களைத் தப்பவைத்தோம்.