وَهِىَ تَجْرِى بِهِمْ فِى مَوْجٍ كَٱلْجِبَالِ وَنَادَىٰ نُوحٌ ٱبْنَهُۥ وَكَانَ فِى مَعْزِلٍ يَٰبُنَىَّ ٱرْكَب مَّعَنَا وَلَا تَكُن مَّعَ ٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionகப்பல், மலைகளைப் போன்று அலை(களுக்கு மத்தி)யில் அவர்களை (சுமந்து)க் கொண்டு சென்றது. ஒரு விலகுமிடத்தில் (விலகி) இருந்த தன் மகனை நோக்கி “என் மகனே! எங்களுடன் (இதில்) பயணி, நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிடாதே” என்று சப்தமிட்டு (நூஹ்) அழைத்தார்.
Tamil Translation - Omar Sharifஅது, மலைகளைப் போன்று அலை(களுக்கு மத்தி)யில் அவர்களை (சுமந்து)க் கொண்டு சென்றது. இன்னும், (அவரை விட்டு) விலகி ஓர் இடத்திலிருந்த அவரது மகனை கூவி அழைத்தார்: “என் மகனே! எங்களுடன் (இதில்) பயணித்துவிடு! நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிடாதே!”
Tamil Translation - Abdulhamid Baqawi42. பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னை விட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி ‘‘என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)'' என்று (சப்தமிட்டு) அழைத்தார்.