وَقَالَ ٱرْكَبُوا۟ فِيهَا بِسْمِ ٱللَّهِ مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآ إِنَّ رَبِّى لَغَفُورٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அது ஓடும் போதும், நிறுத்தப்படும் போதும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு இதில் பயணியுங்கள். நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நூஹ்) கூறினார்: “இதில் பயணியுங்கள். அது ஓடும்போதும், அது நிறுத்தப்படும்போதும் அல்லாஹ்வின் பெயரால் (அது ஓடுகிறது; இன்னும், நிற்கிறது). நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi41. அதற்கவர் (தன்னைச் சார்ந்தவர்களை நோக்கி,) ‘‘இதைச் செலுத்தவும் நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்'' என்று கூறினார்.