أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِۦ وَيَتْلُوهُ شَاهِدٌ مِّنْهُ وَمِن قَبْلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامًا وَرَحْمَةً أُو۟لَٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ وَمَن يَكْفُرْ بِهِۦ مِنَ ٱلْأَحْزَابِ فَٱلنَّارُ مَوْعِدُهُۥ فَلَا تَكُ فِى مِرْيَةٍ مِّنْهُ إِنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّكَ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியின் மீது எவர்கள் இருக்கின்றார்களோ -அ(ந்த இறை)வன் புறத்திலிருந்து ஒரு சாட்சியாளரும் அதை ஓத, அதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்க- அவர்கள்தான் இ(ந்த வேதத்)தை நம்பிக்கைக் கொள்வார்கள். (ஏனைய) கூட்டங்களில் எவர் இதை நிராகரிப்பாரோ நரகம் அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும். ஆகவே (நபியே! நீர்) இதில் சந்தேகத்தில் இருக்காதீர். நிச்சயமாக இது உம் இறைவனிடமிருந்துள்ள உண்மைதான்! எனினும், மக்களில் பலர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, எவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவான அத்தாட்சியின் மீது இருக்கிறார்களோ; இன்னும், - அ(ந்த இறை)வன் புறத்திலிருந்து ஒரு சாட்சியாளரும் அதை ஓதிக் கொண்டிருக்கிறாரோ: இன்னும், அதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ - அவர்கள்தான் இ(ந்த வேதத்)தை நம்பிக்கைக் கொள்வார்கள். இன்னும், (ஏனைய) கூட்டங்களிலிருந்து எவர் இதை நிராகரிப்பாரோ நரகம் அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாக இருக்கும். ஆகவே, (நபியே! நீர்) இதில் சந்தேகத்தில் இருக்காதீர். நிச்சயமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த உண்மைதான்! எனினும், மக்களில் அதிகமானோர் (இதை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. எவர்கள் தங்கள் இறைவனின் (திருக் குர்ஆனுடைய) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (‘ஈஸா'வுக்கு) அருளப்பட்டது (-இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக்கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சொர்க்கத்தில்தான்.) இந்த (மூன்று) வகுப்பாரில் எவர்கள் இதை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீர் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உமது இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதை) நம்புவதில்லை.