وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أُو۟لَٰٓئِكَ يُعْرَضُونَ عَلَىٰ رَبِّهِمْ وَيَقُولُ ٱلْأَشْهَٰدُ هَٰٓؤُلَآءِ ٱلَّذِينَ كَذَبُوا۟ عَلَىٰ رَبِّهِمْ أَلَا لَعْنَةُ ٱللَّهِ عَلَى ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் மீது பொய்யை புனைபவரைவிட மகா அநியாயக்காரர் யார்? அவர்கள் தங்கள் இறைவன் முன் சமர்ப்பிக்கப்படுவார்கள். “இவர்கள் தங்கள் இறைவன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று (அப்போது) சாட்சியாளர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களை விட மகா அநியாயக்காரர்கள் யார்? அவர்கள் தங்கள் இறைவன் முன் சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்போது) “இவர்கள் தங்கள் இறைவன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று சாட்சியாளர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது இறங்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு ‘‘இவர்கள்தான் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்'' என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.