أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ قُلْ فَأْتُوا۟ بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهِۦ مُفْتَرَيَٰتٍ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் இதைப் புனைந்தார் என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (உங்களால்) புனையப்பட்ட இது போன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் சாத்தியப்பட்டவர்களை (உதவிக்கு) அழையுங்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லது, அவர் இதை இட்டுக்கட்டினார் என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (உங்களால்) இட்டுக்கட்டப்பட்ட இது போன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு யாரை (எல்லாம் அழைக்க) இயலுமோ அவர்களை (எல்லாம் உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. (நம் தூதர்) இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: இதைப் போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள், அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குச் சாத்தியமான அனைவரையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள் - மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யவும்).