caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:12

فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوحَىٰٓ إِلَيْكَ وَضَآئِقٌۢ بِهِۦ صَدْرُكَ أَن يَقُولُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَآءَ مَعَهُۥ مَلَكٌ إِنَّمَآ أَنتَ نَذِيرٌ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ وَكِيلٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“அவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு வானவர் வரவேண்டாமா?” என்று அவர்கள் (உம்மைப் பற்றி) கூறுவதால் உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுபவற்றில் சிலவற்றை நீர் விட்டுவிடக் கூடியவராக ஆகலாம்; அதன் மூலம் உம் நெஞ்சம் நெருக்கடியாக ஆகலாம். (நபியே!) நீரெல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். அல்லாஹ்தான் எல்லாப் பொருள் மீதும் பொறுப்பாளன் ஆவான்!
Tamil Translation - Omar Sharifஆக, “அவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு வானவர் வரவேண்டாமா?” என்று அவர்கள் (உம்மைப் பற்றி) கூறுவதால் உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுபவற்றில் சிலவற்றை நீர் விடக் கூடியவராக ஆகலாம்; இன்னும், அதன் மூலம் உம் நெஞ்சம் நெருக்கடியுற்றதாக ஆகலாம். (நபியே!) நீரெல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். அல்லாஹ்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பொறுப்பாளன் (கண்காணிப்பாளன்) ஆவான்! (ஆகவே, அவன் தான் நாடியபடி தனது படைப்புகளின் காரியங்களை நிர்வகிக்கிறான்.)
Tamil Translation - Abdulhamid Baqawi12. (நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீர் சடைந்து) உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீரோ? ‘‘உமக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உம்முடன் ஒரு வானவர் வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவது உமது உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அது பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீர் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கின்ற ஒரு தூதர்தான். அல்லாஹ்தான் அனைத்தையும் நிர்வகிப்பவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70