فَإِلَّمْ يَسْتَجِيبُوا۟ لَكُمْ فَٱعْلَمُوٓا۟ أَنَّمَآ أُنزِلَ بِعِلْمِ ٱللَّهِ وَأَن لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ فَهَلْ أَنتُم مُّسْلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(உங்கள் உதவியாளர்களை நீங்கள் அழைத்த பிறகு) அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கவில்லையெனில், அது இறக்கப்பட்டதெல்லாம் அல்லாஹ்வின் அறிவைக் கொண்டுதான் என்பதையும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை என்பதையும் அறியுங்கள். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்விற்கு மட்டும் பணிந்த) முஸ்லிம்களா(க ஆகிவிடுகிறீர்களா)? (என்று கூறுவீராக!)
Tamil Translation - Omar Sharifஆக, “(இணைவைப்பாளர்களே! நீங்கள் அழைத்த) அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கவில்லையெனில், (இன்னும், நீங்களும் அவர்களும் இந்த வேதத்தை போன்றதை உருவாக்க முடியவில்லை எனில்) இ(ந்த வேதமான)து இறக்கப்பட்டதெல்லாம் அல்லாஹ்வின் அறிவைக் கொண்டுதான் என்பதையும், அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு மட்டும் பணிந்த) முஸ்லிம்களா(க ஆகிவிடுகிறீர்களா)? (என்று நபியே அவர்களிடம் கூறுவீராக!)
Tamil Translation - Abdulhamid Baqawi14. ‘‘நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) இறக்கப்பட்டது தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் பணிந்து வழிபடுவீர்களா?