فَلَا تَكُ فِى مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هَٰٓؤُلَآءِ مَا يَعْبُدُونَ إِلَّا كَمَا يَعْبُدُ ءَابَآؤُهُم مِّن قَبْلُ وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنقُوصٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) இவர்கள் வணங்குபவற்றில் (ஏதும் உண்மை இருக்குமோ என்று) சந்தேகத்தில் ஆகிவிடாதீர். (இதற்கு) முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கியதைப் போன்றே (கற்சிலைகளையும் பிசாசுகளையும்) தவிர இவர்கள் (புதிதாக எதையும்) வணங்கவில்லை. இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை இவர்களுக்கு குறைக்கப்படாமல் நிச்சயமாக நாம் முழுமையாகக் கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifஆகவே, (நபியே! அந்த சிலைகளின் பிரமாண்டத்தையும் அவற்றுக்கு செய்ப்படுகின்ற ஆடம்பர சடங்குகளையும் பார்த்து) இவர்கள் வணங்குபவற்றில் (ஏதும் உண்மை இருக்குமோ என்று) சந்தேகத்தில் ஆகிவிடாதீர். (இதற்கு) முன்னர் இவர்களுடைய மூதாதைகள் (சிலைகளில்) எதை வணங்கினார்களோ அது போன்றவைகளை தவிர இவர்கள் (புதிதாக எதையும்) வணங்கவில்லை. இவர்களுடைய (தண்டனையின்) பாகம் குறைக்கப்படாமல் நிச்சயமாக நாம் இவர்களுக்கு முழுமையாகக் கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi109. (நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவற்றைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீர் சந்தேகப்பட வேண்டாம். (ஓர் ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (ஆதாரம் எதுவுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக ஒரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம்.