caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 110

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:110

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَٰبَ فَٱخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِى شَكٍّ مِّنْهُ مُرِيبٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அதில் மாறுபாடு கொள்ளப்பட்டது. உம் இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லையெனில் (இம்மையிலேயே) இவர்களுக்கிடையில் (காரியம்) முடிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அவர்கள் அதில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் உள்ளனர்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். ஆக, (அவர்களுக்குள்) அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. இன்னும், உம் இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லையெனில் (இம்மையிலேயே) இவர்களுக்கிடையில் (காரியம்) முடிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அவர்கள் இ(ந்த வேதத்)தில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் உள்ளனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi110. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (இந்தக் குர்ஆனில் இவர்கள் மாறுபடுகின்றவாறே) அதிலும் அவர்கள் மாறுபட்டார்கள். (அவர்கள் தண்டனை பெறுகின்ற காலம் மறுமைதான் என்று) உங்கள் இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில் (இம்மையிலேயே) இவர்களுடைய காரியம் முடிவு பெற்றிருக்கும். நிச்சயமாக (மக்காவாசிகளாகிய) இவர்களும் (இந்தக் குர்ஆனைப் பற்றிக் குழப்பமான) சந்தேகத்தில் இருக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70