caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 108

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:108

وَأَمَّا ٱلَّذِينَ سُعِدُوا۟ فَفِى ٱلْجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا مَا دَامَتِ ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ إِلَّا مَا شَآءَ رَبُّكَ عَطَآءً غَيْرَ مَجْذُوذٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, நற்பாக்கியமடைந்தவர்கள் சொர்க்கத்தில் (நுழைக்கப்படுவார்கள்). உம் இறைவன் நாடியதைத் தவிர, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை முடிவுறாத அருட்கொடையாக அதில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்.
Tamil Translation - Omar Sharifஆகவே, (நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்து) நற்பாக்கியம் பெற்றவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். எனினும், (நம்பிக்கை கொண்டு, ஆனால் பாவங்களை செய்த நம்பிக்கையாளர்கள் விஷயத்தில்) உம் இறைவன் நாடியதைத் தவிர. (அத்தகையவர்கள் தண்டனை அனுபவிப்பதற்காக நரகத்தில் தள்ளப்பட்டு; பிறகு, சொர்க்கம் செல்ல அனுமதிக்கபப்டுவார்கள். பிறகு சொர்க்கம் சென்ற எல்லோரும்) வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை முடிவுறாத அருட்கொடையாக அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi108. நற்பாக்கியவான்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். உமது இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட்கொடையாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70