فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ ءَامَنَتْ فَنَفَعَهَآ إِيمَٰنُهَآ إِلَّا قَوْمَ يُونُسَ لَمَّآ ءَامَنُوا۟ كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ ٱلْخِزْىِ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு தங்கள் நம்பிக்கை தங்களுக்கு பலனளித்ததாக ஓர் ஊர் இருக்கக்கூடாதா! எனினும் ‘யூனுஸ்’ உடைய சமுதாயம், நம்பிக்கைகொண்ட போது உலக வாழ்வில் இழி(வான) வேதனையை அவர்களை விட்டு நீக்கினோம். இன்னும் ஒரு காலம் வரை அவர்களுக்கு சுகமான வாழ்வளித்தோம்.
Tamil Translation - Omar Sharifஆக, ஓர் ஊர் (வாசிகள்) நம்பிக்கை கொண்டு அவர்களின் நம்பிக்கை அவர்களுக்கு பலனளித்திருக்கக்கூடாதா! எனினும் ‘யூனுஸ்’ உடைய சமுதாயம், நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவான தண்டனையை அவர்களை விட்டு நீக்கினோம். இன்னும், ஒரு காலம் வரை அவர்களுக்கு சுகமான வாழ்வளித்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi98. தங்கள் நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனுஸ்' உடைய மக்களைப் போல மற்றோர் ஊரார் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். மேலும், சிறிது காலம் சுகம் அனுபவிக்க அவர்களை நாம் விட்டு வைத்தோம்.