وَلَقَدْ بَوَّأْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مُبَوَّأَ صِدْقٍ وَرَزَقْنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ فَمَا ٱخْتَلَفُوا۟ حَتَّىٰ جَآءَهُمُ ٱلْعِلْمُ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு மிக நல்ல இடத்தை அமைத்தோம்; நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு வழங்கினோம். (வேதத்தின்) ஞானம் அவர்களிடம் வரும் வரை அவர்கள் மாறுபடவில்லை. எதில் அவர்கள் மாறுபடுகின்றனரோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் நிச்சயமாக உம் இறைவன் தீர்ப்பளிப்பான்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வசிப்பதற்கு தகுதியான சிறப்பான) மிக நல்ல இடத்தை அமைத்து கொடுத்தோம்; இன்னும், நல்ல பொருள்களிலிருந்து அவர்களுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும்) வழங்கினோம். ஆக, (வேதத்தின்) ஞானம் அவர்களிடம் வரும் வரை அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் நிச்சயமாக உம் இறைவன் தீர்ப்பளிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi93. நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். ஆகவே, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரை இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதில் அவர்கள் மாறு செய்கின்றனரோ அதைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உமது இறைவன் தீர்ப்பளிப்பான்.