caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 94

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:94

فَإِن كُنتَ فِى شَكٍّ مِّمَّآ أَنزَلْنَآ إِلَيْكَ فَسْـَٔلِ ٱلَّذِينَ يَقْرَءُونَ ٱلْكِتَٰبَ مِن قَبْلِكَ لَقَدْ جَآءَكَ ٱلْحَقُّ مِن رَّبِّكَ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நாம் உமக்கு இறக்கியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் (கொடுக்கப்பட்ட) வேதத்தை படிக்கின்றவர்களிடம் கேட்பீராக! உம் இறைவனிடமிருந்து உண்மை உமக்கு வந்துவிட்டது. ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீர் அறவே ஆகிவிடாதீர்!
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே!) நாம் உமக்கு இறக்கிய (வேதத்)தில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் (கொடுக்கப்பட்ட) வேதத்தை படிக்கின்றவர்களிடம் கேட்பீராக! உம் இறைவனிடமிருந்து உண்மை உமக்கு திட்டவட்டமாக வந்துவிட்டது. ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீர் அறவே ஆகிவிடாதீர்!
Tamil Translation - Abdulhamid Baqawi94. (நபியே!) நாம் உமக்கு இறக்கியிருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்.) நீர் சந்தேகித்தால் உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உமது இறைவனிடமிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உம்மிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70