caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 88

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:88

وَقَالَ مُوسَىٰ رَبَّنَآ إِنَّكَ ءَاتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُۥ زِينَةً وَأَمْوَٰلًا فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا۟ عَن سَبِيلِكَ رَبَّنَا ٱطْمِسْ عَلَىٰٓ أَمْوَٰلِهِمْ وَٱشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا۟ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்கும் (ஆடம்பர) அலங்காரத்தையும் இவ்வுலக வாழ்க்கையில் செல்வங்களையும் கொடுத்தாய். எங்கள் இறைவா! அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்கு (அவற்றை பயன்படுத்துகின்றனர்). எங்கள் இறைவா! அவர்களின் பொருள்களை நாசமாக்கு! அவர்களுடைய உள்ளங்களை இறுக்கிவிடு! துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மூஸா கூறினார்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் (ஆடம்பர) அலங்காரத்தையும் செல்வங்களையும் கொடுத்தாய். எங்கள் இறைவா! அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (அவற்றை பயன்படுத்துகிறார்கள்). எங்கள் இறைவா! அவர்களின் பொருள்களை நாசமாக்கு! இன்னும், அவர்களுடைய உள்ளங்களை கடினமாக்கி (அவற்றின் மீது முத்திரையிட்டு) விடு! ஆக, அவர்கள் துன்புறுத்தக்கூடிய தண்டனையை (கண்ணால்) காணும் வரை, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi88. மூஸா (தன் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன் வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று பிரார்த்தித்தார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70