caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 89

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:89

قَالَ قَدْ أُجِيبَت دَّعْوَتُكُمَا فَٱسْتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“(மூஸாவே! ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்; அறியாதவர்களின் பாதையை நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்” என்று (அல்லாஹ்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) கூறினான்: “(மூஸாவே! ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் இருவரும் (மார்க்கத்திலும் அதன் பக்கம் அழைப்பதிலும்) உறுதியாக இருங்கள்; இன்னும், அறியாதவர்களின் பாதையை நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi89. அதற்கு (இறைவன், ‘‘மூஸாவே ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (மார்க்கத்தில்) உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70