وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّءَا لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَٱجْعَلُوا۟ بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம். “நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்திற்காக ‘மிஸ்ரில்’ (பல) வீடுகளை அமையுங்கள்; (அந்த) உங்கள் வீடுகளை தொழுமிடங்களாக ஆக்குங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள். (மூஸாவே) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: “நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்திற்காக எகிப்தில் (பல) வீடுகளை அமையுங்கள்! இன்னும், (அந்த) உங்கள் வீடுகளை தொழுமிடங்களாக ஆக்குங்கள்! இன்னும், தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு (அல்லாஹ்வின் உதவியும் சொர்க்கமும் உண்டு என்று) நற்செய்தி கூறுவீராக!”
Tamil Translation - Abdulhamid Baqawi87. (ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: ‘‘நீங்கள் இருவரும் உங்கள் மக்களுக்காக ‘மிஸ்ரில்' பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்கள் அவ்வீடுகளையே மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள்.'' (‘‘மேலும், நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்'' என்று) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (மூஸாவே) நற்செய்தி கூறுவீராக.