caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 74

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:74

ثُمَّ بَعَثْنَا مِنۢ بَعْدِهِۦ رُسُلًا إِلَىٰ قَوْمِهِمْ فَجَآءُوهُم بِٱلْبَيِّنَٰتِ فَمَا كَانُوا۟ لِيُؤْمِنُوا۟ بِمَا كَذَّبُوا۟ بِهِۦ مِن قَبْلُ كَذَٰلِكَ نَطْبَعُ عَلَىٰ قُلُوبِ ٱلْمُعْتَدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருக்குப் பின்னர் (பல) தூதர்களை அவர்களுடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்கள் அவர்களிடம் (பல) அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். முன்னர் அவர்கள் பொய்ப்பித்தவற்றை நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருக்கவில்லை. வரம்பு மீறிகளின் உள்ளங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவர்களுடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். ஆக, அவர்கள் (பல) அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். முன்னர் அவர்க(ளுடைய மூதாதைக)ள் பொய்ப்பித்தவற்றை இவர்களும் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. எல்லை மீறியவர்களின் உள்ளங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi74. அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்த உண்மைகளை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இல்லை. வரம்பு மீறுபவர்களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70