caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 73

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:73

فَكَذَّبُوهُ فَنَجَّيْنَٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ وَجَعَلْنَٰهُمْ خَلَٰٓئِفَ وَأَغْرَقْنَا ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அம்மக்கள்) அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் பாதுகாத்தோம். அவர்களை பிரதிநிதிகளாக ஆக்கினோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்று கவனிப்பீராக!
Tamil Translation - Omar Sharifஆக, (அம்மக்கள்) அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். இன்னும், அவர்களை வாரிசுகளாக ஆக்கினோம். இன்னும், நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். ஆக, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு (மோசமாக) இருந்தது என்று கவனிப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi73. (எனினும்,) அவர்களோ அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எப்படி ஆயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70