بَلْ كَذَّبُوا۟ بِمَا لَمْ يُحِيطُوا۟ بِعِلْمِهِۦ وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيلُهُۥ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, எதன் அறிவை அவர்கள் சூழ்ந்தறியவில்லையோ அதைப் பொய்ப்பித்தனர். அதன் விளக்கம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறியாததை) பொய்ப்பித்தனர். ஆகவே, அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக!
Tamil Translation - Omar Sharifமாறாக, எதைப் பற்றிய அறிவை இவர்கள் சூழ்ந்தறியவில்லையோ அதைப் பொய்ப்பித்தனர். அதன் விளக்கமோ இதுவரை இவர்களுக்கு வரவில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அவர்கள் அறியாததை) பொய்ப்பித்தனர். ஆகவே, அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi39. எனினும், அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவற்றையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எப்படி முடிந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.