أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰهُ قُلْ فَأْتُوا۟ بِسُورَةٍ مِّثْلِهِۦ وَٱدْعُوا۟ مَنِ ٱسْتَطَعْتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதை (நம் தூதர்) “இட்டுக்கட்டினார்” என அவர்கள் கூறுகின்றனரா? (நபியே!) கூறுவீராக! “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்களை அழையுங்கள், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்.”
Tamil Translation - Omar Sharif“இதை (நம் தூதர்) இட்டுக்கட்டினார்” என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! “ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு முடிந்தவர்களை (உங்கள் உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi38. இதை (நம் தூதராகிய) ‘‘அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்.''