caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:18

وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَٰٓؤُلَآءِ شُفَعَٰٓؤُنَا عِندَ ٱللَّهِ قُلْ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ سُبْحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشْرِكُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு தீங்கிழைக்காத, அவர்களுக்கு பலனளிக்காதவற்றை வணங்குகிறார்கள்; இன்னும் “இவை அல்லாஹ்விடம் எங்கள் சிபாரிசாளர்கள்” என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே!) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் உயர்ந்துவிட்டான்” என்று கூறுவீராக.
Tamil Translation - Omar Sharifஎது அவர்களுக்கு தீங்கிழைக்காதோ; இன்னும், அவர்களுக்கு பலனளிக்காதோ அதைத்தான் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகிறார்கள். இன்னும், “இவை அல்லாஹ்விடம் எங்களுடைய பரிந்துரையாளர்கள்” என்று கூறுகிறார்கள். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்விற்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன்; இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் (தகுதியால்) மிக உயர்ந்தவனாக இருக்கிறான்” என்று கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi18. (இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு அவர்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய முடியாதவற்றை வணங்குவதுடன் ‘‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை'' என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா? அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட மிக உயர்ந்தவன்'' என்று கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70