caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:17

فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلْمُجْرِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றிபெற மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனைவிட; அல்லது, அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றிபெற மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) குற்றவாளிகள் வெற்றி அடையவே மாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70