وَإِذَا مَسَّ ٱلْإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوْ قَاعِدًا أَوْ قَآئِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَآ إِلَىٰ ضُرٍّ مَّسَّهُۥ كَذَٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا۟ يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனை துன்பம் தீண்டினால் அவன் தன் விலாவின் மீது (சாய்ந்தவனாக), அல்லது உட்கார்ந்தவனாக, அல்லது நின்றவனாக நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டு அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிட்டபோது அவன் தன்னை தீண்டிய துன்பத்திற்கு நம்மை அழைக்காதது போன்று செல்கிறான். வரம்புமீறிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை இவ்வாறு அலங்கரிக்கப்பட்டன.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மனிதனுக்கு துன்பம் ஏற்பட்டால், அவன் தன் விலாவின் மீது (சாய்ந்தவனாக); அல்லது, உட்கார்ந்தவனாக; அல்லது, நின்றவனாக (அதை நீக்கித் தரும்படி) நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டு அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிடும்போது அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நம்மை அழைக்காதது போன்று சென்று விடுகிறான். எல்லை மீறி(ய பாவி)களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை இவ்வாறு அலங்கரிக்கப்பட்டன.
Tamil Translation - Abdulhamid Baqawi12. மனிதனுக்கு ஒரு தீங்கேற்பட்டால் (அதை நீக்கும்படி) அவன் தன் (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்று விடுகிறான்.வரம்பு மீறுகின்ற (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன.