وَلَا تَدْعُ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكَ وَلَا يَضُرُّكَ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அன்றி உமக்கு பலனளிக்காதவற்றையும் உமக்குத் தீங்களிக்காதவற்றையும் அழைக்காதீர்! நீ (அவ்வாறு) செய்தால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்வை அன்றி உமக்கு பலனளிக்காதவற்றையும் உமக்குத் தீங்களிக்காதவற்றையும் (நபியே!) நீர் அழைக்காதீர்! ஆக, நீர் (அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்க வழிபாடு) செய்து விட்டால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi106. ஆகவே, உமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்.