دَعْوَىٰهُمْ فِيهَا سُبْحَٰنَكَ ٱللَّهُمَّ وَتَحِيَّتُهُمْ فِيهَا سَلَٰمٌ وَءَاخِرُ دَعْوَىٰهُمْ أَنِ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் அவர்களின் பிரார்த்தனை, “அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும். அதில் அவர்களின் முகமன் “ஸலாம்” ஆகும். அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதி “நிச்சயமாக புகழ் அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது” என்று இருக்கும்.
Tamil Translation - Omar Sharifஅதில் அவர்களின் பிரார்த்தனையாவது, “அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும். அதில், அவர்களின் முகமன் “ஸலாம்” ஆகும். இன்னும், அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதியானது, “நிச்சயமாக புகழ் (அனைத்தும்) அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது” என்பதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. அதில் அவர்கள் (நுழைந்ததும்) ‘‘எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)'' என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) ‘‘ஸலாமுன் (அலைக்கும்)'' என்று முகமன் கூறுவார்கள். முடிவில் ‘‘புகழனைத்தும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபாலிக்கின்றவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது'' என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள்.