وَلَا عَلَى ٱلَّذِينَ إِذَا مَآ أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَآ أَجِدُ مَآ أَحْمِلُكُمْ عَلَيْهِ تَوَلَّوا۟ وَّأَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ حَزَنًا أَلَّا يَجِدُوا۟ مَا يُنفِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீர் அவர்களை (வாகனத்தில்) ஏற்றுவதற்காக உம்மிடம் அவர்கள் வந்தால் உங்களை ஏற்றுவதற்கு நான் எதையும் பெறவில்லையே என்று நீர் கூற, (போருக்கு) செலவு செய்வதை தாம் பெறாத கவலையினால் அவர்களுடைய கண்கள் கண்ணீரால் பொங்கி வழிய திரும்பியவர்கள் மீதும் (குற்றம்) இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீர் அவர்களை (வாகனத்தில்) ஏற்றி அனுப்புவதற்காக உம்மிடம் அவர்கள் வந்தால், “உங்களை ஏற்றி அனுப்புவதற்கு நான் (வாகன) வசதி பெற்றிருக்கவில்லையே” என்று நீர் கூறினால், (போருக்கு) செலவு செய்கின்ற வசதியை தாம் பெறாத கவலையினால் அவர்களுடைய கண்கள் கண்ணீரால் பொங்கி வழிய எவர்கள் திரும்பி சென்றார்களோ அவர்கள் மீதும் குற்றம் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi92. எவர்கள் (போருக்குரிய) வாகனத்தை நீர் தருவீர் என உம்மிடம் வந்து, ‘‘உங்களை நான் ஏற்றி அனுப்பக்கூடிய வாகனம் என்னிடம் இல்லையே'' என்று நீர் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாதுபோன துக்கத்தினால் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி ஒரு குற்றமும் இல்லை.)