caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 91

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:91

لَّيْسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلْمَرْضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُوا۟ لِلَّهِ وَرَسُولِهِۦ مَا عَلَى ٱلْمُحْسِنِينَ مِن سَبِيلٍ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபலவீனர்கள் மீதும், நோயாளிகள் மீதும், (போருக்கு) செலவழிப்பதை பெறாதவர்கள் மீதும் -அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நன்மையை நாடினால்- ஒரு குற்றமுமில்லை. நல்லறம் புரிவோர் மீது (குற்றம் கூற) வழி ஏதும் இல்லை. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
Tamil Translation - Omar Sharifபலவீனர்கள் மீதும்; இன்னும், நோயாளிகள் மீதும்; இன்னும், (போருக்காக) செலவழிப்பதற்கு வசதி பெறாதவர்கள் மீதும் - அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் நன்மையை நாடினால் (அவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் இருப்பதில்) - அறவே குற்றம் ஏதுமில்லை. நல்லறம் புரிவோர் மீது குற்றம் கூற வழி ஏதும் இல்லை. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi91. பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதைப் பற்றி) அவர்கள் மீது ஒரு குற்றமுமில்லை. (இத்தகைய) நல்லவர்கள் மீது (குற்றம் கூற) ஒரு வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுள்ளவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70