caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 65

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:65

وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِٱللَّهِ وَءَايَٰتِهِۦ وَرَسُولِهِۦ كُنتُمْ تَسْتَهْزِءُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இதைப் பற்றி) நீர் அவர்களைக் கேட்டால் “நாங்கள் இருந்ததெல்லாம் (பேச்சில்) மூழ்குபவர்களாகவும் விளையாடுபவர்களாகவும்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவனுடைய தூதரையுமா பரிகசித்துக் கொண்டிருந்தீர்கள்?”
Tamil Translation - Omar Sharif(இதைப் பற்றி) நீர் அவர்களிடம் கேட்டால், “நாங்கள் எல்லாம் (சிரித்து கேலியாக பேசுவதில் கவனமற்று மிகத் தீவிரமாக) மூழ்கி இருந்தோம்; இன்னும், (பேசி) விளையாடிக் கொண்டிருந்தோம்” என்று அவர்கள் நிச்சயம் (பதில்) கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவனுடைய தூதரையுமா கேலிசெய்து கொண்டிருந்தீர்கள்?”
Tamil Translation - Abdulhamid Baqawi65. (இதைப் பற்றி) நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் ‘‘விளையாட்டுக்காக நாங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா நீங்கள் பரிகசிக்கிறீர்கள்?'' என்று நீர் கேட்பீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70