caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 58

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:58

وَمِنْهُم مَّن يَلْمِزُكَ فِى ٱلصَّدَقَٰتِ فَإِنْ أُعْطُوا۟ مِنْهَا رَضُوا۟ وَإِن لَّمْ يُعْطَوْا۟ مِنْهَآ إِذَا هُمْ يَسْخَطُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) தர்மங்களில் உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் உண்டு. அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்பட்டால் திருப்தியடைவார்கள். அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படவில்லையென்றால் அப்போது அவர்கள் ஆத்திரப்படுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே! நீர் கொடுக்கின்ற) தர்மங்களில் உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் இருக்கின்றனர். ஆக, அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படுவார்களேயானால் திருப்தியடைவார்கள். இன்னும், அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படவில்லையென்றால் அப்போது அவர்கள் ஆத்திரப்ப(ட்)டு (உம்மை குறை கூறு)கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. (நபியே!) நீர் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70